பூந்தமல்லி : அண்ணா நகரில் மூதாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தவர் கல்லூரி மாணவரா என தனிப்படை போலீசார் வ¤சாரிக்கின்றனர். அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் எஸ்எம் நகர் பகுதியில் வசிப்பவர் முனிராஜ் (45). இவரது மனைவி விஜயபிரியா (37). முனிராஜின் தாய் திரிபுரசுந்தரி (65) மகனுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மகன், மருமகள் வேலைக்கு போனதும் வீட்டில் தனியாக இருந்த திரிபுரசுந்தரி மர்ம நபரால் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 65 சவரன் நகை, 3 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.3 கோடி மதிப்பிலான சொத்து பத்திரங்கள் கொள்ளையடிக்கப்ட்டிருந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஜெஜெ நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
குற்றவாளியை பிடிக்க திருமங்கலம் உதவி கமிஷனர் கலிதீர்த்தான் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணி யன், விஜயகுமார், சங்கர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முனிராஜின் வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவில் பதிவான காட்சிகளை போலீ சார் பார்த்தனர். அதில் டி ஷர்ட், பேன்ட் அணிந்த 22 வயது வாலிபர் ஒருவர் கையில் பேக்குடன் வீட்டிற்குள் நுழைவது, அரை மணி நேரத்தில் முனிராஜின் பேக் ஒன்றை எடுத்துக்கொண்டு அவசரமாக 2 பேக்குகளுடன் வீட்டில் இருந்து வெளியே செல்வது உள்ளிட்ட காட்சிகள் பதிவாகி இருந்தது.
அண்ணா நகர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். எனவே முனிராஜ் வீட்டுக்கு வந்தது கல்லூரி மாணவரா என்று போலீசார் விசாரிக்கிறார்கள். மேலும் முனிராஜின் வீட்டிற்கு செக்யூரிட்டி உள்ளார். சம்பவத்தின்போது செக்யூரிட்டி எங்கு சென்றார் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை பிடித்து விசாரிக்கிறார்கள். வீட்டு வேலை செய்து வரும் வசந்தா (50) என்ற பெண்ணிடமும் விசாரணை நடக்கிறது. மூதாட்டி கொலையில் குற்றவாளி குறித்து முக்கிய தடயம் கிடைத்துள்ளதாகவும், விரைவில் குற்றவாளி பிடிபடுவான் என்றும் போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.